independenceday-2016

Press Information Bureau

Government of India

Prime Minister's Office

வீர விருதுகளைப் பெற்றவர்களை கவுரவிக்கும் இணைய தளத்தை பிரதமர் துவக்கி வைத்தார்

Posted On :15, August 2017 10:05 IST

நாடு விடுதலை பெற்றபின் இதுவரை வீர விருதுகளைப் பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் புதிய இணைய தளத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.

தொடர்ச்சியான ட்வீட்டுகளின் வழியாக http://gallantryawards.gov.in/ என்ற முகவரியில் துவங்கப்பட்டுள்ள இணையதளம் குறித்து அறிவித்த பிரதமர், இந்த விருதுகளைப் பெற்ற நமது நாட்டின் துணிவு மிக்க ஆண்கள், பெண்கள், குடிமக்கள், ராணுவப் படைப்பிரிவினர் குறித்த செய்திகளை, இணையதளம் பாதுகாத்து வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

“நாடு விடுதலை பெற்ற காலத்திலிருந்து வீர விருதுகளைப் பெற்ற நமது வீரர்களை நினைவு கூரும் வகையில் http://gallantryawards.gov.in/ என்ற இணைய தளத்தை துவக்கி வைத்துள்ளேன்.

http://gallantryawards.gov.in/ என்ற முகவரியில் இயங்கும் இந்த இணைய தளம் நமது நாட்டின் துணிவு மிக்க ஆண்கள், பெண்கள், குடிமக்கள், ராணுவப் படைப்பிரிவினர் குறித்த செய்திகளை பாதுகாத்து வழங்கும்.

இதில் தகவல்கள்/ புகைப்படங்கள் ஏதாகிலும் விடுபட்டு இருப்பதாக நீங்கள் கருதினால், இந்த இணைய தளத்தில் அவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அவற்றை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்” என பிரதமர் குறிப்பிட்டார்.

******