Prime Minister's Office
சர்தார் படேலின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்; ஒற்றுமைக்கான ஓட்டத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
Posted On :31, October 2017 10:15 IST
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, புதுதில்லியில் படேல் சதுக்கம் பகுதியில் உள்ள சர்தார் படேலின் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோர் இன்று மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர், மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்திலிருந்து “ஒற்றுமைக்கான ஓட்டத்தை” பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சர்தார் வல்லபபாய் படேலின் பங்களிப்பை, குறிப்பாக நாட்டை ஒருமைப்படுத்துவதற்காக அளித்த பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.
சர்தார் படேலுக்கும், நமது நாட்டை கட்டமைப்பதற்காக அவர் அளித்த பங்களிப்புக்கும் இந்திய இளைஞர்கள் மதிப்பு அளிப்பதாக பிரதமர் கூறினார்.
இந்தியா, அதன் வேற்றுமையால் பெருமையடைவதாக பிரதமர் கூறினார். ஒற்றுமைக்கான ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகள், உணர்வையும், ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பை அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தியின் நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்படுவதை திரு. நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் உறுதிமொழி செய்துவைத்தார்.
***